tmmk

TMMK

Wednesday, 10 December 2008





VELLORE TMMK





VELLORE TMMK

பள்ளியை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க தமுமுக கோரிக்கை


வேலூர் கோட்டையில் உள்ள பள்ளிவாசலை முஸ்லிம்களிடம் தொழுகைக்காக ஒப்படைக்க வேண்டும் தமுமுக கோரிக்கை



வேலூர் கோட்டையின் உள்ளே உள்ள பள்ளிவாசல்


15-08-2006 அன்று இந்திய சுதந்திர தினம் தமுமுக வினரால் கோவை மாநகரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது அன்றைய தினம் தமுமுக வினர் பல சமூக நலப்பணிகளில் ஈடுபட்டனர் இது குறித்து கோவை மாவட்ட தமுமுக வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:

அன்புடையீர், தமிழகத்தில் கோவை மாநகரம் பிரச்சினைக்குரிய நகரமாகவே பார்க்கப்படுகிறது இச்சூல்நிலையில் கோவை மாநகரில் இந்து முஸ்லிம் நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்தும் விதமாக தமுமுக பல முயற்சிகளை எடுத்து வருகின்றது அதன் தொடர்ச்சியாக சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் மாநில செயளாலர் தமிமுன் அன்சாரி ஆகியோர் கோவை மாநகருக்கு வருகை தந்தனர்.நகரின் பல்வேறு பகுதிகளில் தேசியக்கொடியேற்றினார்கள். சாலையில் செல்வோருக்கெல்லாம் இனிப்புக்கள் வழங்கப்பட்டன.

மேலும் காலை 9.30 மணியளவில் சமூக நல்லிணக்கத்தை வலியுருத்தி மாபெரும் இரத்த தான நிகழ்ச்சி நடத்தப்பட்டது அதில் பல்வேறு சமூகங்களை சார்ந்த ஆன், பெண் என 301 நபர்கள் 5 மணி நேரத்தில் இரத்த தானம் செய்தார்கள். இது தமிழக அளிவில் சாதனை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. தமுமுக தலைவ் பேரா. ஜவாஹிருல்லாஹ், மாநில செயளாலர்கள் உமர், தமிமுன் அன்சாரி ஆகியோர் உரையாற்றினார்கள்.

வேலூர் கோட்டை

நிகழ்ச்சியில் வேலூர் கோட்டையில் உள்ள பள்ளிவாசலை முஸ்லிம்களிடம் தொழுகைக்காக ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்ததுடன் சமூக நல்லிணக்கத்திற்கு தமுமுக எடுத்து வரும் முயற்சிகள் குறித்தும் இந்தியாவின் முதல் சுதந்திர போரான சிப்பாய் கழகம் குறித்தும் உரையாற்றப்பட்டது. நிகழ்ச்சியின் சிறப்பாக புகைப்பட கண்காட்சியும் நடத்தப்பட்டது. சமூக ஆர்வலர்கள், ஜமாத் பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் என பெருந்திரளாக மக்கள் கழந்து கொண்டனர்.

மேற்க்கண்டவாறு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.